Silage Bags

சைலேஜ் தயாரிக்கும் முறை

சைலேஜ் தயாரிக்க, மக்காச்சோளம், சூப்பர் நேப்பியர் போன்ற 70 நாட்கள் நன்கு வளர்ந்த (இரண்டு நாட்கள் காய வைத்த பிறகு) பச்சைத் தழைப்பயிர்களைச் சிறிது சிறிதாக நறுக்கி, காற்று புகாத வகையில் ஒரு குழி அல்லது சேமிப்புப் பையில் நிரப்பி, சுமார் 40 நாட்கள் புளிக்க வைத்து பதப்படுத்த வேண்டும். இந்த நொதித்தல் செயல்முறை மூலம், பயிர்கள் பாதுகாக்கப்பட்டு கால்நடைகளுக்கான பசுந்தீவனமாகப் பயன்படுத்தப்படும்.

செயல்முறைகள்:

  • பயிரைத் தேர்வு செய்தல்: மக்காச்சோளம், சூப்பர் நேப்பியர் போன்ற 70 நாள் வயதுடைய பசுந்தீவனப் பயிர்கள்.
  • பயிரை நறுக்குதல்: சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காற்றுப் புகாத இடத்தில் சேமித்தல்: நறுக்கிய பயிர்களை சைலேஜ் பன்கர் அல்லது பையில் நிரப்பவும். ஒவ்வொரு அடியிலும் மொலாசஸ், வெல்லத் தண்ணீர், கல் உப்பு, தேவையெனில் யூரியா தெளிக்கவும். மிகுந்த அடர்த்தியாக நிரப்ப வேண்டும்.
  • புளிக்க வைத்தல்: நிரப்பிய பிறகு சுமார் 40 நாட்கள் காற்று புகாமல் மூடி வைக்கவும்.
  • பயன்பாடு: நொதித்த பிறகு மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். திறந்த பையை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தி முடிக்கவும்.

சைலேஜின் பயன்கள்:

  • வருடம் முழுவதும் பசுந்தீவனம் கிடைக்கச் செய்கிறது.
  • புளிப்பு நொதிப்பு மூலம் தீவனத்தைப் பாதுகாக்கிறது.
  • ஜீரணத்தை மேம்படுத்தி, புரதச்சத்தை 2-3% அதிகரிக்கிறது.
  • பால் உற்பத்தி அதிகரிக்கிறது; இறைச்சி எடை நல்லது.
  • ஜீரண கோளாறு, மடிநோய் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.
  • மாடுகள் விரும்பி உண்ணும், துர்நாற்றம் ஏற்படாது.

Arjun Silage Bags

நாங்கள் சிறிய விவசாயிகளுக்கு 50 கிலோ மற்றும் 100 கிலோ சைலேஜ் பைகள் கொடுக்கிறோம். ஒவ்வொரு முறையும் பையை திறந்தவுடன் மீண்டும் இறுக்கமாக கட்டி காற்று புகாதவாறு மூடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பூஞ்சை பிடித்து சைலேஜ் கெட்டு விடும்.

எங்களது சைலேஜ் பைகளை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம். அதிக பாதுகாப்புக்கு இரட்டை பைகளாக பயன்படுத்தலாம். உலகத்தரம் வாய்ந்த HDPE பொருட்களால் செய்யப்பட்ட இப்பைகள் நீண்ட காலம் நீடிக்கும்.

பங்கர் உபயோகத்திற்கும் எங்களிடம் சிறிய/பெரிய அளவுகளில், இறக்குமதி செய்யப்பட்ட, நீடித்து உழைக்கும் தரமான தார்பாலின்கள் கிடைக்கின்றன.